Mattu Eravur maangadu kalli amman kovilவரலாற்றுசிறப்பு மிக்க மட்டு.ஏறாவூர் மாங்காட்டு காளியம்மன் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கானோர்பங்கேற்பு! வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு வடபால் பண்டைய நாகர்குலமன்னர்களின் சிறப்பாட்சியும் நிறைமாட்சியும் பெற்ற ஏறுமாநாடு எனும் புகழ் நாமம் கொண்டுஏறாவூர் நகரில் அமைந்திருக்கும் பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ திருஉலாகடந்த(07.07.2011)வியாழக்கிழமை மடையெடுக்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகி (17.07.2011)ஞயிற்றுக்கிழமை காலை தீ மிதிப்புவைபவத்துடன் நிறைவு பெற்றது. பிரம்ம ஸ்ரீ காந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற வருடாந்த சடங்குஉற்சவ திருஉலா நிகழ்வுகளில் இம் முறை ஏரூர் மாங்காட்டு காளிஅம்மன் எழுந்தருளி தினமும்உள் வீதி உலா வரும் நிகழ்வுகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்றதுடன் ஏறாவூர் மாங்காட்டு காளியம்மனின் கவச நூல்வெளியீட்டு நிகழ்வும், அறநெரி பாடசாலை மாணவர்களின் நிகழ்சிகளும் இடம்பெற்றன. சனிக்கிழமை(61.07.2011)சிறப்பு நிகழ்வாக அம்மனுக்கு விநாயகப் பானை எழுந்தருளச் செய்தல்,தீக்குளிக்கு அனல்வளர்த்தல், ஆலய முன்றலில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் சைவசமய சொற்பொழிவு,அறநெறி பாடசாலை மாணவர்களின் நிகழ்சிகள்,வானொலிப்புகழ் அருட்கலைத்திலகம்டி.இராஜரட்ணம் குழுவினரின் மங்கள வாத்தியம்,உடுக்கைக் கலைஞர்களின் உடுக்கைச் சமர் எனபல்வேறு கலைகலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றதுடன் (17.07.2011)ஞயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதிப்பு நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.访问相册: http://kathiravan.jalbum.net/Mattu%20Eravur%20maangadu%20kalli%20amman%20kovil/